
தூத்துக்குடியில் கேவிகே நகர் பகுதியில், பக்கீல் ஓடை உள்ளது. இங்கே அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், அதிகாலை நேரத்தில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஒதுங்குவது வழக்கம். இன்று காலை மர்ம நபர் ஒருவர், மறைந்திருந்து அவர்களை பார்த்து ரசித்தப்படி இருந்தார்.
இதைப் பார்த்த பெண்கள் கூச்சல் போட்டனர். அவர்கள் சத்தத்தைக் கேட்டு, திரண்டு வந்த பொதுமக்கள் தப்பியோடிய அந்த வாலிபரை பிடித்து, அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதன்பின்னர் தென்பாகம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் அண்ணாநகரைச் சேர்ந்த முத்து என்றும் அவருக்கு வயது 28 என்பதும் தெரியவந்தது.
காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை பார்க்கும் இவர், எதிர்க்காக அங்கே வந்தார் என்பதை விசாரித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment