
சீர்காழி அருகே உள்ள மேலச்சாலை கிராமத்தின் 6வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் லட்சுமணன் ( 33) இன்று காலை வாய்க்காலில் மர்மமான முறையில் கொலையுண்டு கிடந்தார்.
கொலையுண்ட அவரின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. கண்களில் ஆசிட் ஊற்றப்பட்டிருந்தது.
இந்த கொலையைக் கண்டித்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் வரத் தாமதமானதாலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வைத்தீஸ்வரன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


No comments:
Post a Comment