சீன அரசு பொய்களாலும், நயவஞ்சகத்தினாலும் சூழப்பட்டு ஆட்சி நடத்தி வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ள திபெத்திய தலைவர் தலாய்லாமா சீனா தன்னை பேயாக சித்திரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தென் ஆபிரிக்க ஆர்ச். பிஷப் ஒருவர் 80 ஆவது பிறந்தநாளைக் கொண் டாடினார். இவரது பிறந்த நாளில் பங்கேற்க அழைப்பு வந்த போதும் சீனாவின் நெருக்கடியால் தலாய்லாமாவுக்கு விசா வழங்க மறுக்கப்பட்டது. இதனால், தலாய்லாமா அவரது இடத்தில் இருந்துகொண்டு காணொளியி னூடாக வாழ்த்துத் தெரிவித்த பின்னர் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஆட்சி அதிகாரம் பொய் மற்றும் வஞ்சனையால் சூழப்பட்டுள்ளது. மக்கள் உண்மையைப் பேச முடியவில்லை. உண்மையை சொன்னால் குரல்வளையை நெரிக்கும் போக்கை சீனா கடைபிடிக்கிறது. கம்யூனிஸ நாடான சீனா ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது.
தென்ஆபிரிக்கா சீனாவுடன் மிக நெருங்கிய வர்த்தக நாடாக இருப்பதால் எனக்கு விசா கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதே நேரத்தில் பிஷப் டுட்டு மிக நேர்மையான மனிதர். நல்ல சேவகர். எனவே இவரது பிறந்த நாளில் பங்கேற்க நான் ஆசைப்பட்டேன்.
இன்னும் இவரது 90 ஆவது பிறந்த நாளில் அழைப்பு வரும்போது தென்ஆபிரிக்கா அப்போதாவது சீனாவுக்கு அடிமையாகாமல் இருக்குமானால் நான் நிச்சயம் பங்கேற்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment