சரத் பொன்சேகாவை அமெரிக்கா அரசியல் கைதியாகவே கருதுகிறது.
இந்தநிலையில் வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு இலங்கையின் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வாரம் 3 வருட சிறைத்தண்டனை விதித்தது.
இதனையடுத்து அமெரிக்க இராஜதந்திரி ஒருவருக்கும் இலங்கையின் உயர்தர அமைச்சர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமது நாடு இலங்கையில் நடத்திய ஆய்வு ஒன்றில் சரத் பொன்சேகா விடுவிக்கப்படவேண்டும் என்றே பெரும்பாலான பொதுமக்கள் விரும்புவதாக இந்த சந்திப்பின்போது அமெரிக்கா இராஜதந்திரி குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பை வழங்கவேண்டும்.
இல்லையேல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணையை கொண்டு வரும் என்றும் அமெரிக்க இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.
இலங்கையின் உயர் அமைச்சருடன் அமெரிக்க தூதர் பெற்றீசியா புட்டினியஸே இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடாகியிருந்தது.
எனினும் கடைசி நேரத்தில் அவரின் பிரதிநிதி ஒருவரே –ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் உயர் அமைச்சரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க இராஜதந்திரி, இந்த பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நகர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்தி கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment