சரத் பொன்சேகாவிற்கு வைத்திய சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் ஜயலத் ஜயவர்தன ஆகிய ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரத் பொன்சேகாவை சிறைச்சாலையில் பார்வையிட்டனர்.
சரத் பொன்சேகாவின் நோய் நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்யப்பட்ட காலத்தில், சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மக்களுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் முயற்சி செய்துள்ளது.
தற்போது அவருக்கு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளக் கூடிய அடிப்படை உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment