சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) என்பவர் கடந்த மாதம் 25ம்தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
திருவேங்கடம் போலீ சார் கொலையாளிகள் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் பற்றிய துப்பு கிடைக்காததால் எஸ்பி விஜயேந்திரபிதாரி உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கள் 15 வாகனங்களில் ரோந்து சுற்றி குற்றவாளி களை தேடிவருகிறார்கள்.
வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்றி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
25நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை. இந்நிலையில் தனிப் படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழஈரால் பகுதி யில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல் லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளை யில் குற்றவாளி சிக்கு வானா என்று கேட்டனர்.
மேலும் காவலாளியை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்கள் தூத்துக்குடிக்கு சென்று மீன் வாங்கி வியாபாரம் செய் வதால் அவர்கள் மூலம் இலங்கையில் இருந்து வந்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வங்கியில் கொள்ளையடிக்க வந்தவர்கள் காவ லாளி தடுத்ததால் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றாலும் கூட அவர்கள் கொள்ளை முயற்சி எதிலும் ஈடுபடவில்லை.
இதனால் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த கும்பல் தான் இதை செய்ததா? என்ற கோணத்திலும் விசா ரணை நடக்கிறது.
சங்கரன்கோவில் இடைத் தேர்தல் விரைவில் நடை பெற உள்ள நிலையில் காவலாளி கொலையில் இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படாததால் போலீ சாரின் நம்பகத்தன்மையை பொதுமக்கள் இழந்து விட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகேவும் குற்றம்சாட்டியிருந்தார்.
எத்தனையோ கொலை வழக்கில் குற்றவாளிகள் பற்றி ஏதாவது ஒரு சிறிய குளு கிடைக்கும். ஆனால் காவலாளி கொலையில் மட்டும் கொலையாளிகள் யார்? என்ற மர்மம் நீடிக்கிறது.


No comments:
Post a Comment