2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தங்களுக்கும் ஜாமீன் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட 6 பேர், தங்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை விரைவில் விசாரிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கனிமொழி உள்ளிட்ட 6 பேரது வழக்கறிஞர்களும், டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இன்று இந்த வேண்டுகோளை விடுத்தனர்.
இவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற டிசம்பர் 1 ஆம் தேதியன்று நடைபெறும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment