நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டதாகப் பாடகர் கார்த்திக் சொன்னார். அவர் மேலும்கூறியதாவது: 'நீதானே என் பொன்வசந்தம்', 'இரண்டாம் உலகம்', 'மாற்றான்' உட்பட பல படங்களில் பாடுகிறேன். 'அரவான்' மூலம் என்னை வசந்தபாலன் இசையமைப்பாளர் ஆக்கினார். இப்போது கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ஜெய் நடிக்கும் 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்துக்கு இசையமைக்கிறேன். இது தெலுங்கிலும் உருவாகிறது. அடுத்து நேரடி தெலுங்கு படமான 'ஒக்கடினே'வுக்கு இசையமைக்கிறேன். எனக்கு நடிக்க தெரியாது. அது வேறொரு துறை. பாடுவது, இசையமைப்பது எனக்கு சுலபமானது. நடிப்பு கஷ்டமானது. அதனால் நிறைய நண்பர்கள் கேட்டும் நடிக்க மறுத்து விட்டேன்.


No comments:
Post a Comment