சிவாஜி நடித்த 'நேர்மை', 'திருப்பம்' ரஜினி நடித்த 'துடிக்கும் கரங்கள்', 'ஜானி', கமல் நடித்த 'சிவப்பு ரோஜாக்கள்', 'கடல் மீன்கள்', விஜய் நடித்த 'மின்சார கண்ணா' உட்பட 65-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் கே.ராஜகோபால் என்கிற கே.ஆர்.ஜி. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலை வைத்தும் படங்கள் எடுத்துள்ளார். சென்னை தி. நகரில் வசித்து வந்த கே.ஆர்.ஜி, நேற்றுமுன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு வயது 73. மரணம் அடைந்த கே.ஆர்.ஜி.க்கு சாந்தா என்ற மனைவியும், ராதா என்ற மகளும் உள்ளனர். ஒரே மகனான கங்காதரன் ஏற்கனவே காலமாகிவிட்டார். மறைந்த கே.ஆர்.ஜியின் உடலுக்கு ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மற்றும் கவுண்டமணி, பூர்ணிமா ஜெயராம், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, கோவைத்தம்பி, மோகன் நடராஜன், தேனப்பன் உட்பட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். நேற்றுமாலை தி.நகர் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


No comments:
Post a Comment