விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கமோ, அரச படைகளோ யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்பதாக நோர்வே பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் சொல்க் ஆர்.ரோவின் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்பதை சர்வதேச நீதிமன்றத்தில் போதுமான சாட்சியங்கள் மற்றும் தடயங்களுடன் நிரூபிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் போர்க்குற்றங்களை இழைத்த காலகட்டத்தில் அவற்றைக் கண்டும் காணாத நிலையில் நோர்வே அரசாங்கம் நடந்து கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர் அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அண்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேலா பாலசிங்கம் கூட போர்க்குற்றங்களை இழைத்தவர் தான் என்று வலியுறுத்தும் ரோவின், அவர் சிறுவர் போராளிகளின் கழுத்துகளில் சயணைட் குப்பிகளை அணிவிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் தன் வசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் யுத்தக்குற்றவாளியொருவரான அவரை பிரித்தானிய அரசாங்கம் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment