
நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறும், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்திக் கூறியுள்ளது.
அத்துடன் சிறிலங்காவில் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் தலைமையுடன் புலம்பெயர் சமூகம் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்தவாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய உறவுகளுக்கான தூதுக்குழுவே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
ஜீன் லம்பேர்ட் தலைமையிலான இந்தக் குழு யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளுக்கு மேற்கொண்ட கள ஆய்வுப் பயணத்தை அடுத்து இந்த அறிக்கை பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment