
மணலாறை அண்மித்த பிரதேசமொன்றில் இராணுவச் சிப்பாயொருவர் மர்மமான முறையில் சூடுபட்டு மரணித்துள்ளார்.கொக்கிளாய் பிரதேசத்தின் நாயாறு பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே அவரது பங்கருக்குள் துப்பாக்கிச் சூட்டுக்காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
மரணித்த சிப்பாய் அனுராதபுரம் பிரதேசத்தின் நொச்சியாகம பகுதியைச் சோ்ந்தவர் என்றும் திருமணமாகி இரண்டு வாரங்களே ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவரது உறவினர்கள் சிப்பாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அவரது துப்பாக்கி பயன்படுத்தப்படாத நிலையில் துப்பாக்கிச்சூடு பட்டு அவர் மரணித்திருப்பது இராணுவத்தினரிடையேயும் பலத்த அச்சமொன்றைத் தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மர்மமான முறையில் மரணத்தைத் தழுவிக் கொண்ட இராணுவச் சிப்பாயின் சடலம் இன்று மாலை மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொதுமருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment