ஈழத்தில் போர் உக்கிரமடைந்தது முதல், பார்வதி அம்மாள் சென்னை வந்து திருப்பி அனுப்பப்பட்டது வரை மெளனமாக இருந்த இவர் இலங்கை சென்று ராஜபக்ஷவையும் சந்தித்து பொன்னாடை போர்த்தியவர் என்ற பெருமையும் பெற்றவர்.
பொன்னாடை போர்த்திய அனைவரும் முகவரிதெரியாமல் போய் இருக்க, மேலும் ஒருவர் திகார் சிறையில் 10க்கு 10 அடி அறையில் வாடுகிறார். புலியைப் போல அல்லது அதற்கு இணையான ஒரு சொல் சிறுத்தை ஆகும்.
புலிகள் என்று பெயர் வைக்காமல் விடுதலைச் சிறுத்தைகள் என்னும் கட்சியை தேசிய தலைமை வழங்கிய ஆலோசனையில் உருவாக்கி, பின்னர் அவர்களுக்கே ஆப்புவைத்தவர் இந்த தொல் திருமா. கடந்த தமிழகத் தேர்தலில் சுமார் 11 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாகத் தோற்ற ஒரே கட்சி என்ற பெருமை இவரையே சாரும். தமிழ் நாட்டில் இவர் யார் என்ற முகவரியைத் தொலைத்து நிற்கும் இவர் புது முகவரிதேடி அலைந்தவேளை கிடைத்த கயிற்றை இறுகப் பற்றியுள்ளார்.
அது என்ன என்று நாடு கடந்த நபர்களுக்கு நன்றாகத் தெரியும் ! திரும்பவும் தாம் ஈழத் தமிழர்களின் தோழன் அவர்களுக்காகவே உழைப்பவன், ஈழம் என் பேச்சு ஈழம் என் மூச்சு என மூச்சு முட்ட பேசி தமிழக மக்களின் மற்றும் புலம் பெயர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முயல்கிறார். இல்லை இல்லை தமிழக வோட்டுகளை பெறவும், புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றவும் முனைகிறார். நாடு கடந்த நபர்கள் விழித்துக்கொள்வார்களா தெரியவில்லை. கையெழுத்து வேட்டை என இவர் புது தங்கவேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளார். இம் முறை பாச்சா பலிக்குமா?
உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது பற்றிருந்தால், மத்திய அரசாங்கத்தை ஆதரித்த கலைஞர் கட்சியில் இருந்து விலகி இருக்கலாமே ஏன் அதனைச் செய்யவில்லை. மத்திய அரசுக்கு துணை போகும் கலைஞரோடும் இருப்பேன், ஈழத் தமிழருக்காவும் பேசுவேன், சோணியாவையும் அம்மா என்பேன் என்று மூண்று தோணியில் காலைவைத்தார், கடலில் விழுந்தார். கடலில் விழுந்த அவருக்கு தற்போது ஒரு கயிறு கிடைத்துள்ளது மெல்ல ஏறி மேலே வர முனைகிறார். தமிழர்கள் ஒன்றும் அவ்வளவு இளிச்சவாய்கள் அல்லரே... பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன நடக்கவிருக்கிறது என்று!


No comments:
Post a Comment