
இலங்கையின் இறுதி யுத்தத்தில் போர் குற்றம் புரிந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வன்னி இறுதி யுதத்தின் சாட்சியாக இருந்து வருபவர் வாணி குமார். இறுதி யுத்தத்தில் அகப்பட்டு பிரித்தானிய அரசால் மீட்கப்பட்டார் .
இவர் பல்வேறு பெயர்களில் உலாவுவதாகவும் சந்தேகப்பேர்வழி எனவும் இலங்கையின் முன்னணி இராணுவ தளபதிகளில் ஒருவரான சவேந்திர சில்வா பல நூறு வெளிநாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் அச்சுறுத்தியுள்ளார்.
இவருடைய படையணி கொலை தமிழ் பெண்கள் கற்பழிப்பு என பல குற்றச்சாட்டுகளை உலக அரங்கில் எதிர் நோக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நியூயோக் ஒளிபதிவை வாணிகுமார் பிரித்தானிய பொலிசாரிடம் ஒப்படைத்து கொலை அச்சுறுத்தல் அரசியல் முத்திரை குத்தி மிரட்டியமை போன்ற குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யபடும் பட்சத்தில் சர்வேந்திரசில்வா இன்ரபோல் ஆதரவுடன் கைது செய்ய பிரித்தானிய அரசு உத்தரவிடலாம் என சட்டத்தரனி ஒருவர் தமிழ் சி.என்.என் இற்கு தெரிவித்தார்.


No comments:
Post a Comment