கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து சமிக்ஞைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக ஆஸ்திரேலிய கப்பல் குழுவொன்று அறிவித்திருக்கிறது.
ஒரு பிரத்தியேக மின்சார சாதனம் ஒன்றிலிருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞைகள் போல் இவை இருக்கின்றன. இதையடுத்து தாம் சரியான இடத்திலேயே தேடுதலை மேற்கொள்கிறோம் என நினைப்பதாக் குறித்த தேடுதல் கப்பலின் கேப்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 8ம் திகதி 239 பேருடன் மலேசியாவிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் காணாமல் போனது MH370 எனும் மலேசிய விமானம். நீண்ட நாட்களின் தேடுதலின் பின்னர் விமானம் தென் இந்து சமுத்திரத்தின் ஆழமான பகுதிக்குள் வீழ்ந்து வெடித்திருக்கலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தற்போது கறுப்பு பெட்டியைக் கண்டுபிடிக்கும் முயற்சியை குறித்த ஆஸ்திரேலிய கப்பல் தீவிரப்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment