சினிமாவை விட்டு விலகியபோது நயன்தாரா உச்சத்தில் இருந்தார். அவர் தமிழில் கடைசியாக நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. சம்பளத்தை ஒரு கோடியாக நிர்ணயித்து நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க நயன்தாராவை மொய்த்தனர். எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்து புராணகதை சீதை வேடம் என்பதால் தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் மட்டும் நடித்து கொடுத்தார். அதன் பிறகு திருமணத்துக்கு தயாரானார். ஆனால் பிரபுதேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டது. திருமணத்துக்கு தாமதம் செய்தார். பட வேலைகள் இருப்பதாக சாக்குபோக்கு சொல்லி தள்ளி வைத்தார்.
அதே நேரம் தான் இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் நடித்த ஹன்சிகா மோட்வானியிடம் நட்பை இறுக்கமாக்கி வந்தார். இந்த தகவல்கள் நயன்தாராவுக்கு தெரிய வர மோதல் உருவானது. இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் நட்பு நடிகர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் தகராறு தீரவில்லை.
தற்போது இருவரும் அமைதியாக பிரிவது என்று முடிவு எடுத்து பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து நயன்தாரா மீண்டும் நடிக்க முடிவு செய்து தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா ஜோடியாகியுள்ளார். அடுத்து தமிழ் படத்திலும் நடிக்க கதை கேட்கிறார்.


No comments:
Post a Comment