வீரகாவியமான மாவீரர்களான கேணல்கிட்டு லெப்ரினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன்,கடற்புலி கப்டன் ஜீவா, கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன்,கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன், கடற்புலிலெப்ரினன் தூயவன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாளில் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சிவந்தன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தாயக விடுதலைப் போராட்டத்தில் வீரமரணத்தை தழுவிய வீரவேங்கை கொற்றவன் மற்றும் கப்டன் தமிழ் அன்பன் ஆகியோரின் சகோதரன் இந்திரன் தவச்செல்வா அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி வைத்தார்.
அகவணக்கத்தடன், வருகைதந்த மக்கள் மலர்வணக்கம் செலுத்தினார்கள். கலை பண்பாட்டுக்கழகத்தினரின் இசையில் உணர்வு பூர்வமான எழுட்சிப் பாடல்கள் பாடப்பட்டன.
பின்னர் ‘மண் காக்கப் பிறந்த எங்கள் மாவீரன்’ கிட்டு அண்ணா என்ற கவிதை இடம்பெற்றது. இந்நிகழ்வில் துர்க்கா கலை கலாசாரமன்ற மாணவர்களின் எல்லாளன் எழுச்சி நடனம் எல்லோரையும் இன உணர்வு ஊட்டியது.
ஈழமதி நடனக்குழுவினரின் எழுச்சி நடனத்துடன், செல்வன் தமிழ்மாறன் ஆகாசின் மானமறவன் கிட்டுமாமா என்ற பேச்சு இடம்பெற்றது. ராதா நடனாலயம், மற்றும் செங்காலன் மாணவர்களின்எழுச்சி நடனங்களும் மக்கள் மனதைக் கவர்ந்தன தொடர்ந்து சிவந்தன் சிறப்புரையினை நிகழ்த்தினார்.
அடுத்ததாக, மாலதி கலையக மாணவர்களின் எழுச்சி நடனத்துடன் துர்க்கா கலை கலாசார மன்றத்தினரின் முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் என்ற இன விடுதலை நாடகமும் சிறப்பான ஆக்கத்துடன் அமைந்தது.
இறுதியாக தேசியக் கொடி இறக்கப்பட்டு தமிழ்த் தேசிய உறுதிமொழியுடன் நிகழ்வுநிறைவுபெற்றது.





No comments:
Post a Comment