ஐ.நாவின் பாதுகாப்புக் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியனவற்றில் இந்தியா இடம் பெற்றிருந்தும், தனது அண்டை நாடுகளான இலங்கை, மியான்மரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய வாய்ப்புகளைத் இந்தியா தவற விட்டது மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.உலகின் 90 நாடுகளின் மனித உரிமைகள் பற்றி, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2012 ஆய்வறிக்கையில் இந்தியா தொடர்பிலான ஆயிவிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கும் தலைமை வகிப்பதற்கு ஐ.நாவின் பாதுகாப்புக் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவை இரு அமைப்புகளில் உள்ள தனது உறுப்பினர் அந்தஸ்தை சரியான முறையில் பயன்படுத்த இந்தியா தவறி விட்டதோடு, சிரியா போன்ற நாடுகளில் நிகழ்ந்த கொடூரங்கள் விடயத்தில் இந்தியா மௌனமாகவே இருந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment