
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் வாரம் கடந்த மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் ஆலயங்களில் மணி ஒலிக்கக் கூடாது என்றும், விளக்கு எரிக்கக் கூடாது என்றும் பல கட்டுப்பாடுகளை ஆலய நிர்வாகத்திடம் திணித்திருந்தது இராணுவம்.
இருந்தும் தங்களின் கட்டுப்பாடுகள் மீறப்படும் என்ற அச்சத்தினால் அனைத்து ஆலயங்களுக்கும் பாதுகாப்புப் பலப்படுத்தியிருந்தது.
என்ன செய்வது? காவல் காக்கும் கவுளுக்கே காவல் காத்தது இலங்கை இராணுவம்.
இவ்வாறு பளைப் பகுதியில் உள்ள சிறிய ஆலயம் ஒன்றில் தங்களது கடமைகளை பொறுப்புணர்வுடன் செய்து வந்தனர் இராணுவத்தினர்.
இருந்தும் அப் பகுதிக்கு வாகனத்தில் வந்தவர்கள் மேற்படி ஆலயத்தை வணங்கி விட்டு விளக்கு ஏற்றி விட்டுச் சென்றுள்ளனர்.
பிரதேசவாசிகளை விளக்கேற்ற அனுமதிக்காத இராணுவம் வெளியில் இருந்து வந்தவர்களுக்கு அனுமதியளித்திருப்பது வேடிக்கையளிக்கின்றது.
இதேநேரம் ஆலயத்திற்குள் காலணியுடன் நிற்பதைத் தவித்திருந்த இராணுவம், ஆலய மூலஸ்தானத்திற்கு அருகில் கழற்றி வைத்திருக்கின்றது காலணியை.
நவம்பர் மாதம் 25,26,27 ஆம் திகதிகளில் ஆயுதங்களின் நடுவில் வீற்றிருந்து அருள்பாலித்தான் எம்பெருமான்.


No comments:
Post a Comment