கடந்த மாவீரர் தினத்தில் நடந்த குழுவாதங்களும் போட்டி மவீரர் தினங்களாலும் மக்கள் பலர் குழம்பிப்போய் இருந்தனர். ஆனால் நேற்றைய கூட்டத்டொடரில் அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து மனித உரிமை தினத்தில் தமிழ் மக்களுக்காக ஒன்றாகக் குரல்கொடுப்போம் எனக் கூறியிருந்தது பெரும் வரவேற்க்கத்தக்க விடையமாகும்.
முக்கியமாக வருகின்ற வருடம் மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமை பேரவையின் அமவிர்க்கு முன்னர் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பாக இக் கூட்டத்தில் ஆரயப்பட்டது. இதில் பிரித்தானிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய உறுப்பினர்கள், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள், பிரித்தானிய தமிழ் கொன்சவற்றி , பிரித்தானிய தமிழ் லேபர், தமிழ் பிரண்ஸ் ஒப் லிப்ரெம் மற்றும் சர்வதேச தமிழ் ஊடகவியளாளர் சங்கம்(IATAJ) ACT NOW ஆகிய அமைப்புக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் தகவல் மையம், தமிழ் தேசிய கூட்டமைப்பு-பிரித்தானிய கிளை, ஆகிய அமைப்புக்கள் கலந்து கொள்ளமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்திருந்தனர். மேலும் சில செயல் அமர்வுகள் நடைபெறவிருக்கின்றது என்ற செய்தியையும் ஏற்பாட்டாளர்கள் அதிர்வுக்கு தெரிவித்திருந்தனர்.
அதிர்வு


No comments:
Post a Comment