இந்திய மக்களிடம் 48.45லட்சம் கோடி மதிப்பிலான 18,000 டன் தங்கம் இருப்ப தாக ஆய்வு தெரிவிக்கிறது. தங்கம் வாங்குவது என்பது இந்திய மக்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துடன் ஒன்றியது.
தங்கம் வாங்குவதில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2 ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் இதர மாற்றங்களால் தங்கம் விலை உயர்ந்தாலும், இந்தியாவில் தங்கத்துக்கான தேவை அதிகமாகவே உள்ளது.
இந்திய மக்கள் தாங்கள் அணியும் நகை களுக்காக மட்டுமின்றி, சேமிப்புக்காகவும், தங்கம் வாங்குவது தற்போது அதிகரித் துள்ளது. இந்திய மக்களிடம் மட்டும் ரூ. 48.45 இலட்சம் கோடி மதிப்பிலான 18,000 டன் தங்கம் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இது உலக அளவில் மொத்த முள்ள தங்கத்தில் 11 சதவீதம் அத்துடன் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 50 சதவீத பங்காகும்.
No comments:
Post a Comment