இந்நிகழ்விற்கு வழக்கறிஞர் வீரக்குமரன் அவர்கள் தலைமையேற்றார். வழக்கறிஞர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மக்கள் மருத்துவர் திரு. பாரதிச்செல்வன் ஈழ மக்களின் துயரத்தினை பிரதிபலிக்கும் வகையில் உணர்ச்சிப் பாடலை பாடினார்.
திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தென்றல் சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை வழக்கறிஞர். அ.நல்லதுரை ஆகியோர் கலந்துக் கொண்டு இன எழுச்சியுரை ஆற்றினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்று இந்நிகழ்வில் பங்கெடுத்து இன உணர்வெழுச்சி எய்தினர்.








No comments:
Post a Comment