லண்டனில் கடந்த ஐந்து நாட்களாக நிலவிய வன்முறைகளில் கொள்ளையடிக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ள பல வர்த்தக நிலையங்களில், இலங்கைத் தமிழர் ஒருவரின் கடையும் அடித்து நொருக்கப்பட்டு அனைத்துப் பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு லண்டன. பகுதியிலுள்ள கந்தையா சிவாகரனின் கடை முற்றாக அழிந்துள்ள நிலையில், 'அனைத்துமே முடிந்துவிட்டது. எனது ஜீவனோபாயம் முடிந்துவிட்டது. எனது 11 வருடகால வாழ்க்கை போய்விட்டது. என மிகவும் கவலையுடன் ' ஏ.எவ்.பியிடம் அவர் கூறியுள்ளார்.
கடந்த 11 வருடங்காக விடுமுறை எதுவும் பெறாமல் வாராந்தம் 90 மணித்தியாலங்கள் உழைத்தவர் இவர். ஆனால், இப்போது அவரின் கடையின் பொருட்கள் வன்முறையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, கடையும் நொருக்கப்பட்டுள்ளது.
இவரின் கடைக்கு ஏற்பட்ட சேதம் சுமார் 50,000 ஸ்ரேலிங் பவுண்கள் எனத் தெரிவிக்ப்படுகிறது.
அவரின் கட்டிடத்திற்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தாலும் அதனுள்ளிருந்த பொருட்கள் காப்புறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி - இங்கே அழுத்தவும்.


No comments:
Post a Comment