
வன்னிப்பகுதியில் பெண்கள் மீதுகட்டவிழ்த்துவிடப்படும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மோசமான சூழலை தோற்றிவித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது
சிறீலங்காப்படையினரின் தடுப்பு முகாம்களில்இருந்த பெருமளவான பொண்கள் தற்போது விடுதலைஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்கள் மீதாக வன்முறைச்சம்பவங்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் அண்மையில் 12 குழந்தைகள் முறைதவறிப்பிறந்துள்ளன
குறிப்பாக காணவனை இழந்த அல்லது கணவன் தடுப்பில் உள்ள பெண்களை இலக்குவைத்தே இந்த குற்றசாட்டுக்கள் எழுப்பபட்டுவருகின்றது இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்திலும் பாலியல்வல்லுறவு அதிகரிக்கும் அதேவேளை எல்லாம் இயல்பிற்கு திரும்பி விட்டது என கூறிக்கொள்ளும் சிறீலங்கா அரசு
யாழ்ப்பாணத்தில் கடந்த மே மாதம் வரை ஜந்து மாதங்களில் 18 அகவைக்கு உட்பட்ட 75 பாடசாலை மாணவிகள் முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்திருக்கின்றார்கள் இவ்வாறு தமிழ் சிறார்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது .இந்த சம்பவங்களை யார் தட்டிக்கேட்ப்பது.


No comments:
Post a Comment