
2006 ம் ஆண்டு ஆகஸ்ட் கனங்கள் நிறைந்த மாதம், தமிழீழ மக்கள் சிங்கள இனவாதத்தில் சிக்கி பல லட்ச மக்களை சிங்கள ஆட்சியாளர், பௌத்த மத மதவாதிகள் கையில் 1917ம் ஆண்டு முதல் சிக்குண்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.1917ல் ஆரம்பித்த படுகொலைகள் காலம் செல்ல செல்ல படுகொலைகள், ஆள்கடத்தல்கள், கற்பழிப்பு, கலாச்சார அழிவுகள் அதிகரித்து அந்த அழிவின் உச்சக்கட்டமாக முள்ளிவாய்க்காலில் மாபெரும் மக்கள் அழிவுடன் நின்றுவிடவில்லை, இன்று வரை பல விதங்களிலும் தமிழ் இன அழிப்பு தொடர்து கொண்டிருக்கிறது.
இதுவரை காலமும் ஈழத் தமிழர்களைப் பற்றி கதைக்காத புலம்பெயர் நாட்டு பத்திரிகைகள், இதுவரை காலமும் தமிழர் போராட்டத்தை, பயங்கரவாதப் போராட்டமாக பேசிய இந்த உலகம் சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை பார்த்து மாற்றங்கள் உருவாகிக் கொண்டு வருகிறது.
அன்று நாம் எமது போராட்டத்தை பற்றி எவரும் பேசவில்லை என்று ஆதங்கப்பட்டோம், அதற்காகவே பல போராட்டங்களை செய்தோம். இன்று உலகத்தில் உள்ள பத்திரிகைகள் எல்லாம் தமிழர் போராட்டம் பற்றி பேசுகிறது.
இங்கிலாந்தில் இயங்கி வரும் சனல் 4 தொலைக்காட்சி சாட்சிகள் உடனான ஆவணங்களை வெளியிட்டு வருகிறது.
Al Jazzera ஊடகம் பல ஆவணங்களை வெளியீட்டு சிறிலங்கா அரசின் வேண்டா விருந்தாளிகளாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்களுக்கு ஆதரவாகும், இன்று உலகம் எம் பக்கம், தாம் விட்ட தவறுகளை உணர்ந்து செயல்படும் போது எமது போரரட்ட வலு அதிகரிக்க வேண்டும்.
2006 ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி 17 தமிழ் இளைஞர்கள், மக்கள் தொண்டர்கள் மூதூரில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
ஆகஸ்ட் 14 ஆம் திகதி படுகொலையின் இன்னொரு உச்ச கட்டம், வள்ளிபுனத்தில் அமைந்திருந்த செஞ்சோலை குழந்தைகள் இல்லத்து வளாகத்தில் சிறிலங்கா விமானப்படையால் போடப்பட்ட குண்டினால் இறந்த 61 இளம் பெண்கள்.
அங்கே இருந்தது இளம் குழந்தைகளும், பிள்ளைகளும் என்று தெரிந்து போடப்பட்ட குண்டுகளினால் இறந்தது எமது சகோதரிகள்.
இந்த அழிவுகளுக்கு இடையே தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அழிவுகளுக்கு சிறிலங்கா அரசு பதில் சொல்லும் நேரம் நெருங்கிகொண்டிருகிறது.
இந்த நேரத்தில் எமது போராட்ட வேகமும் அதிகரிக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 14 ம் திகதி மாலை 3.00 மணிக்கு பிரான்ஸ் மனித உரிமை சதுக்கத்தில் Metro Trocadéro, ligne : 9ல், பிரான்ஸ் தமிழ் மகளிர் அமைப்பு ஒழுங்கு செய்யும் செஞ்சோலை பிள்ளைகளின் நினைவு கூரல் நிகழ்வில் தமிழ் தாய் பிள்ளைகள் நாம் அனைவரும் ஒன்று கூடி இனியும் இவ்வாறான அழிவுகள் வேண்டாம், சிறிலங்கா போன்ற நாடுகள் உலக அரச கட்டமைப்புகளில் அங்கத்துவம் வகிக்க தகுதி அற்றவர்கள் என்று கூறிடுவோம்.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்





No comments:
Post a Comment