தி.மு.க. அரசியல் இலாபத்திற்காகத்தான் அதைச் செய்கிறது என கோத்தபாய கருதினால் அது முற்றிலும் தவறானது. தி.மு.க .நீண்டகாலமாக அதற்காக போராடுகிறது. தி.மு.க. இலங்கைத் தமிழரின் விடுதலையை விரும்புகிறது என்பதை அவர் நன்றாக அறிவார்’ என கருணாநிதி கூறியுள்ளார். போராட்டத்தின் மூலமாக உரிமையை பெற விரும்பும் மக்கள், அவர்களின் அரசியல் உரிமையை நிராகரிப்போரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் இன அழிப்பை தி.மு.க. ஆதரிக்கவில்லை எனக் கூறியுள்ள கருணாநிதி, “யுத்தத்தின் போது மக்கள் இறப்பது இயற்கையானதுதான் எனக் கூறிய ஜெயலலிதா போன்றவர்கள் அல்ல நாம்’ எனவும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment