
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பட்டியல்படுத்தக் கூடாது என ஐரோப்பிய நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தீர்மானித்திருந்தது. எனினும், இந்தத் தீர்மானம் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அயுத போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக ரீதியல் தமது போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என சட்டத்தரணி விக்டர் கோப் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் இணைப்பது பொருத்தமாகாது. தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளுக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தினர்.
சுய நிர்ணய உரிமைக்காக போராட்டம் நடத்திய ஓர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது.
சுய நிர்ண உரிமைகளை வழங்குமாறு போராட்டத்தை முன்னெடுக்கும் இரண்டு தரப்பினரில் ஒரு தரப்பினை மட்டும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


No comments:
Post a Comment