இதற்கு முன்னரும் இரு நாட்டுத் தலைவர்களும் இராஜதந்திகளும் பரஸ்பரம் விஜயங்களை மேற்கொண்டுள்ள போதிலும் ஹினா ரப்பானியின் விஜயமானது இந்திய ஊடகங்களில் மாத்திரமன்றி சர்வதேச ஊடகங்களிலும் பாரிய கவனயீர்ப்பை பெற்றிருந்தது. அதற்கு அவரது வசீகர தோற்றம், நவநாரிகக ஆடை அணிகளுமே பிரதான காரணமாகும்.
அதற்கேற்ப இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் பேசிக்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை ஒரு புறம் வைத்து விட்டு ஹினா ரப்பானியின் அழகு பற்றியும் அவரது வசீகரத் தோற்றம் பற்றியும் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதி வாய்ந்த அவரது ஆடை அணிகலன்கள் பற்றியுமே அதிகமான இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தியாவில் அதி கூடுதலாக விற்பனையாகும் ஆங்கில தினச யான “டைம்ஸ் ஒப் இந்தியா' ஹினா ரப்பானியின் வருகை பற்றிய செய்திக்கு, ““பாகிஸ்தான் அதன் சிறந்த “முகத்தை' வெளிக்காட்டியுள்ளது'' என தலைப்பிட்டிருந்தது.
அதேபோல் ஹிந்தி நாளிதழான “நவ் பாரத் டைம்ஸ்' ““மொடலைப்போன்ற அமைச்ரிடம் இந்தியா வீழ்ந்தது'' என்றும் “ம்பாய் மிரர்' பத்திகை ““பாகிஸ்தான் குண்டு இந்தியாவில் தரை இறங்கியது'' என நகைச் சுவையாகவும் தலைப்பிட்டிருந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுததாகள் அண்மைக் காலமாக இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதாக தெவிக்கப்படும் குற்றச் சாட்டுகளின் அடிப்படையிலேயே இப் பத்திகை குறித்த தலைப்பை நகைச்சுவையாக இட்டிருந்தது.
மற்றுமொரு பத்திகையான “மெயில் டுடே' 34 வயதான பாகிஸ்தான் அமைச்சர் டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது உச்சபட்ச நாகரிகமாகவும் பருவகாலத்தை குறிக்கும் நீலநிற ஆடையை அணிந்திருந்தார்'' எனவும் வர்ணித்திருந்தது.
அத்துடன் ““அரசியல் வாதிகள் கவர்ச்சியாக இருக்க மாட்டார்கள் என யார் சொன்னது?'' என்ற கேள்வி யையும் அது எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி அவரது அணிகலன்களான “சண் கிளாஸ்', வெண்ணிற முத்துமாலை என்பன அவரை மேலும் கவர்ச்சிகரமாக காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தது.
“த டெலி கிராப்' பத்திகையானது திருமணமான இரண்டு குழந்தைகளின் தாயாரான ஹினா, 79 வயது முதியவரான இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்தார் என தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. “ரெடிப்' எனும் பிரபல இணையதளமானது ““எல்லாக் கண்களும் கவர்ச்சிகரமான பாகிஸ்தான் அமைச்சரையே மொய்த்தன'' என வர்ணித் திருந்தது. இந்தியாவின் ஊடகவியலாளரும் எழுத் தாளருமான சீமாகொஸ்வானி இன்னும் ஒரு படி மேலே சென்று ““ஹினாவை கண்டு புதுடில்லி மேகங்கள் கூட எச்சில் வடித்தன'' என வர்ணித்திருந்தார்.
ஹிந்துஸ்தான் பத்திகையின் எழுத்தாளர் ஒருவர், பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சரான ஹினாவை அந்நாடு கவர்ச்சிகரமான ஆயுதமாகப் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தியாவின் நவநாகரிகம் தொடர்பான எழுத்தாளரான அமாரா ஜாவித், ஹினா ரப்பானி கேம்பிட்ஜ் சீமாட்டி கெத்தன் மிடில்டனை விட அழகானவர் என வர்ணித்திருந்தார்.
வழக்கமாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் என்ன விடயங்களைப் பேசிக் கொண்டார்கள் என்பதை அறிய ஆவல் காட்டும் ஊடகங்கள் இம் முறை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரைப் பற்றி மட்டுமே செய்திகளை வெளியிட்டதும், ஊடகவியலாளர்கள் எந்த நேரம் அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டதும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும்.
ஓடத்தில் இந்திய ஊடகவியலாளர்களைக் கடிந்து கொண்ட ஹினா ரப்பானி, என்னைப் பற்றிப் பேசு வதில் நீங்கள் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறீர்கள் எனக் கேட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


No comments:
Post a Comment