
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதில் கருணாநிதிக்கும் பங்கு இருக்கிறது. எனவே கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான். என்று தமிழக சட்டசபையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான கலைராஜன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்துக்கான பொது விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு இலங்கைப் பிரச்சினை தொடர்பாக முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
இலங்கைத் தமிழ் மக்களின் நலன் காக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அவர்களுக்காக பாடுபடுவதுபோல் நாடகம் நடத்தினார்.
மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு மகள் கனிமொழியை அனுப்பி, பரிசுப் பொருள்களை வாங்கிவரச் செய்து மகிழ்ந்தவர் தான் கருணாநிதி.
இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில், ராஜபக்ஸ மட்டும் போர்க்குற்றவாளி கிடையாது.
கருணாநிதியும் ஒரு போர்க்குற்றவாளி தான்.
கருணாநிதி மூன்றுமணி நேரம் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க உண்ணாவிரதப் போராட்டத்தை இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறி நிறுத்தினார். ராஜபக்ஸ போர்நிறுத்தத்தை அறிவித்ததாகவும் கூறினார். கருணாநிதி இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறி அரை மணிநேரத்திலேயே தமிழ் மக்கள் தங்கியிருந்த பாதுகாப்பு வலயங்களின் மீது இலங்கை இராணுவம் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டமை யாவரும் அறிந்ததே.


No comments:
Post a Comment