போர் முடிந்து 2 ஆண்டுகள் கடந்த போதும் தமிழர்களின் துன்பங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்று ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன் செய்தியாளர் கிருஷான் பிரான்ஸிஸ் எழுதிய ஆக்கத்தில், வீதித் தடைகள் அகற்றப்பட்டுள்ளன, மண்மூடைகளைக் காணவில்லை, இலங்கைத் தீவு மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகி இருக்கிறது என்று அரசு அறிவித்த போதும் வடக்கில் தமிழர்களின் துயரம் தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வன்னியில் பல இடங்களில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு விடுவிக்காமல் இருக்கின்றது என்று அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் வீடற்று இருக்கிறார்கள். பிரிந்துபோன குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் எதுவுமில்லை என்று கட்டுரை கூறுகின்றது.


No comments:
Post a Comment