இதேவேளை கடந்த 6ம் திகதி ரொற்ரொன்ராம் நகரத்தில் 29 வயது வெளிநாட்டு பின்னணி கொண்ட நபர் சுட்டுக் கொல்லப்பட்ட காரணத்தினாலேயே இந்தக் கலவரங்கள் வெடித்தன. இப்போது அந்த நபரை போலீசார்தான் சுட்டார்களா என்ற புதிய சந்தேகம் கிளம்பியுள்ளது. இந்த நபர் துப்பாக்கிச் சூடு வேண்டியபடியே டாக்சியில் வந்தார் என்று சந்தேககிக்கப்படுகிறது.
தற்போது நடைபெறும் இங்கிலாந்துக் கலவரங்கள் யாதொரு அரசியல் நோக்கமும், எதிராளிகள் இல்லாமலும் நடைபெறுவதாகவும், கிரிமினல்களின் கொள்ளை முயற்சியே நாடு முழுவதும் பரவிச் செல்வதாகவும் மான்செஸ்டர் உதவி போலீஸ் கமிசனர் தெரிவித்தார். கொள்ளையர்களும், காடையர்களும் மான்செஸ்டர் நகர வீதியையே நாசம் செய்துள்ளார்கள். கடந்த 30 வருடங்களில் மான்செஸ்டர் சந்தித்திராத நாசம் இதுவென்றும் கண்டித்துள்ளார். இருப்பினும் இங்கிலாந்து வீதிகளில் சிறிய அமைதி நேற்றிரவு நிலவியது. இன்னுமொரு கலவரத்தை ஆரம்பிக்கப் போவதாக சில இளையோர் கூறியுள்ளார்கள்.
அதேவேளை டென்மார்க்கில் இருந்து இங்கிலாந்திற்கு உல்லாசப் பயணம் சென்றோர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படியும், வீடுகளை விட்டு வெளியேறும்போது கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்தில் உள்ள டென்மார்க் தூதராலயம் கேட்டுள்ளது.
சிறீலங்காவில் 1983 ஆட்சியில் இருந்த ஐ.தே.க அரசு தமிழ் மக்களுக்கு எதிராக யூலை கலவரத்தை நடாத்தியபோது காடையர்கள் தமிழ்க் கடைகளை கொள்ளையிட்டார்கள். அதுபோல காடையர்களின் கடைக் கொள்ளைகள் நடைபெறுகின்றன. பல தமிழர்களின் கடைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. யூலைக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்து வந்த தமிழர்கள் இங்கிலாந்து வீதிகளில் இன்னொரு யூலைக்கலவரத்தின் கடைக் கொள்ளைகளை காண முடிகிறது. ஜே.ஆர் ஜெயவர்தனா உயிருடன் இருந்திருந்தால் நமது சிங்களவரில் மட்டுமா காடையர்கள் உண்டு இதோ இங்கிலாந்திலும் இருக்கிறார்களே என்று அறிக்கை விட்டிருந்தாலும் ஆச்சரியப்பட இல்லை அம்ம.


No comments:
Post a Comment