*அதனை அண்டிய பகுதிகளான டூட்டிங், மிச்சம் மற்றும் பேளி போன்ற பகுதிகளுக்கும் கலவரம் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப் பகுதியில் பெருமளவான ஆபிரிக்கர்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. இப் பகுதிகளில் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு மத்தியில் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது.
அவர்கள் வீடுகளும் சூறையாடப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல தமிழர்கள் தமது உடமைகளுடன் வெளியேறி (இடம்பெயர்ந்து) உறவினர் வீடுகளில் தங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரித்தானியப் பிரதமர் அவற்றை உடனடியாக ரத்துச்செய்து நாடு திரும்பியுள்ளார் என பி.பி.சி செய்திச் சேவை சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டுள்ள ஆபிரிக்கர்கள் ஸ்போட்ஸ் கடைகளை, சென்ட் விற்கும் மற்றும் மொபைல் போன்கள் விற்கும் கடைகளை உடைப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரோட்டில் உள்ள சில வாகனங்களை எரியூட்டும் இவர்கள் அதனைப் பயன்படுத்தி அருகில் உள்ள கடைகளை உடைத்து அக்கடைகளில் உள்ள பொருட்களைக் சூறையாடுகின்றனர்.
11 வயதுச் சிறுவன் ஒருவன் உடைக்கப்பட்ட கடைகளுக்குள் இருந்து பெருவாரியான சிகரெட்டுகளை எடுத்துச்செல்லும் காட்சிகளை பி.பி.சி ஒளிபரப்பியுள்ளது.
ஆபிரிக்க இனத்தவர் ஒருவரைப் பொலிஸார் கடந்த வியாழன் அன்று சுட்டுக்கொன்றதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் தொடக்கி வைத்த இந்தக் கலவரம் தற்போது லண்டனின் பல பாகங்களுக்கு பரவியுள்ளது மிகவும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து சுயாதீனமான பொலிஸ் முறைப்பாட்டு ஆணையம் ஒன்று விசாரணை நடத்திவருகின்றது.
லண்டனில் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான டோட்டன்ஹாம், அடிக்கடி இனரீதியான குழப்பங்கள் வெடிக்கக்கூடிய இடமாக இருந்து வந்துள்ளது.
அங்கு வாழ்கின்ற ஆபிரிக்க கறுப்பினச் சமூகத்தில் சிலரிடத்தில், தமது இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையென்ற கவலையும் இருக்கின்றது.
சமீபத்தில் லிபியாவிலும் எகிப்து மற்றும் சிரியா போன்ற நாடுகளில் கிளர்ச்சியாளர்களைத் தூண்டி விட்டு, அந்தலைவர்களைப் பதவியிறக்க மேற்குலக நாடுகள் அப்போராட்டங்களையும் கலவரங்களையும் ஒரு சாட்டாகப் பயன்படுத்தியது. அதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் உதவிசெய்தது.
ஆனால் தற்போது பிரித்தானியாவில் இவ்வாறானதொரு கலவரம் மூண்டுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் பொலிசாரால் சுடப்பட்ட ஆபிரிக்க இனத்தவரா இல்லை வெளிநாடு ஒன்று இச் சம்பவத்தைப் பாவித்து பிரித்தானியாவில் கலவரத்தை ஊக்குவிக்கிறதா என்ற கேள்விகளும் இங்கே எழுகின்றன.
தமிழ் மக்களுக்கு எங்கு சென்றாலும் இந்நிலை மாறாதோ என்ற உணர்வுடன் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


No comments:
Post a Comment