கடந்த பத்து வருடங்களில் ஆப்கான் அபிவிருத்திக்காக மட்டும் 300 பில்லியன் டாலர்கள் கொட்டி இறைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆப்கானில் அபிவிருத்தி எதுவும் பெரிதாக நடைபெறவில்லை. கொட்டிய பணம் முழுவதும் கடலில் கரைத்த புளிபோல கண்ணுக்கு தெரியாமல் போயுள்ளது.
அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ஆப்கானும், அதன் அதிபர் ஹர்மீட் கார்சாயும் சரியான வளர்ச்சியை காட்டாமல் சேம்பேறிகளாகவே இருந்தால் மேலை நாடுகள் பணத்தை வழமைபோல கொட்டியிறைக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலை நாடுகளின் காதில் பூ சுற்றி அங்குள்ள அரசு போகும் ஆமை வேகத்தை தொடர்ந்தும் சகித்துக்கொள்ளும் நிலையில் உலகம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலில் பழுத்த பழமாக ஆடும் ஆப்கான் அரசுக்கு வைக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் :
01. உதவிகள் மக்களுக்கே அல்லாது இராணுவத்திற்கு பயன்படுத்தப்படக்கூடாது.
02. உதவிகள் மூலம் தொழிற்சாலைகள், விவசாயம், சக்தி வளத்தை மேம்படுத்த வேண்டும்.
03. அதிபர் ஹர்மீட் கார்சாயின் குடும்பத்தினர்க்கும், தலைநகருக்கும் மட்டுமே உதவிகளை பாவிப்பது தவறு.
04. உள்ளுர் வரிகள் ஒழுங்குபட விதிக்கப்பட வேண்டும்.
05. ஊழலற்ற அரச நிர்வாகம் அவசியம்
06. பாராளுமன்றம் சகல நடவடிக்கைகளையும் கண்காணிக்க அதிகாரம் வேண்டும்.
07. மக்களைக் கொண்டு இராணுவம் கட்டப்பட வேண்டும்.
08. விலைகூடிய வெளிநாட்டு கட்டட தகரகர்களை அகற்ற வேண்டும்.
09. வரிவிதிப்பில் அரச நிர்வாகம் செம்மையாக நடக்க வேண்டும்.
வரும் மூன்று வருடங்களில் இவற்றை கருத்தில் கொண்டு நடப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து அர்த்தமற்று ஆப்கானுக்கு உதவ வெளிநாடுகளில் காசு மரம் காய்க்கவில்லை என்ற செய்தி தெளிவாக அனுப்பப்பட்டுள்ளது. இதே நிலைதான் சிறீலங்காவுக்கும் வரும்.


No comments:
Post a Comment