சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதன்படி இந்த மாநில அரசு நடக்கும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.சட்டப்பேரவையில் (08.08.2011) பட்ஜெட் மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் குணசேகரன், சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்டு பதில் அளித்த முதல் அமைச்சர் ஜெயலலிதா,
மாண்புமிகு உறுப்பினர் தெரிவித்த கருத்தில் இந்த மாநில அரசுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மாற்றுக் கருத்து கிடையாது. உச்சநீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் ஆணையை எதிர்பார்த்திருக்கிறோம். உச்சநீதிமன்றம் இன்றே கூட தனது ஆணையை வழங்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உச்சநீதிமன்றத்தின் ஆணை பிறப்பித்தவுடன், உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதன்படி இந்த மாநில அரசு நடக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


No comments:
Post a Comment