அதற்கான அழுத்தங்களை இந்திய அரசு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள கட்சி, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உயர்மட்ட சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இரண்டு நாள்கள் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் இறுதியில் நேற்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் கட்சி இதனை வலியுறுத்தி உள்ளது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் கௌரவத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்” என்று அறிக்கை கூறுகின்றது. இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நகர்வும் இலங்கை அரசால் மேற்கொள்ளவில்லை என்று மார்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது.
போர் முடிந்ததும் அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதம் அளித்திருந்த போதும், இதுவரை அது எதுவும் நடக்கவில்லை” என்று மத்திய குழு குறிப்பிட்டுள்ளது.இனியும் தாமதங்கள் ஏற்படாமல் இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்குத் தேவையான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தி உள்ளது. போரினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் தமிழர்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினரால் மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் கொடூரங்கள் புரியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதுடன் அந்த விசாரணைகள் உயர் மட்டத்திலானதாகவும் சுயாதீனமானதாகவும் இருக்க வேண்டும் எனவும் கட்சியின் மத்திய குழு விடுத்த அறிக்கை வலியுறுத்தி உள்ளது.


No comments:
Post a Comment