சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் அளித்த உத்தரவுகளை அதிமுக அரசு அலட்சியப்படுத்தும் வகையில் நடந்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமச்சீர் கல்வி வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத தமிழக அரசின் அணுகுமுறை எங்குபோய் முடியுமோ என்று ஜனநாயகவாதிகள் கவலை கொண்டுள்ளனர். நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், ஒன்றேகால் கோடி மாணவ மாணவியரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சமச்சீர் கல்வி குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.
கல்விக் கட்டணம் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கை பற்றி நிதிநிலை அறிக்கையில் ஏதும் இல்லை. காலியாக உள்ள 60,000 ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவது பற்றி அறிவிப்பு இல்லை. அண்ணா பல்கலைக்கழகங்களை இணைத்து ஒரே பல்கலைக்கழகமாக அறிவிப்பது பற்றி அறிவிப்பு இல்லை. அரசு துறைகளில் உள்ள இரண்டு லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து திட்டம் இல்லை என்று கூறியுள்ளார்.


No comments:
Post a Comment