
கருணாவின் பிரிவின்போது மூன்றாம் தரப்பொன்றிடம் ஆயுதங்கள் கைமாறியிருப்பதாக கோத்தாபய தெரிவிக்கின்றார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுதங்களில் ஒரு தொகுதி வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கருணாவினால் இரண்டாகப் பிரிவடையச் செய்யப்பட்ட போது புலிகளிடமிருந்த பெருந்தொகையான ஆயுதங்களை வேறொரு அணியினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையின் கீழ் இன்று நாடு முழுவதும் சட்ட விரோதமான முறையில் காணப்படும் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது நேர்காணலின்போது மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment