அரக்கோணத்தில் ஆசையாக வளர்த்த நாய் திடீரென விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர் மனிதர்களுக்கு செய்வதை போலவே பாடைகட்டி, தாரை, தப்பட்டைகள், பேண்டு வாத்தியங்கள் ஒலிக்க இறுதி சடங்கு செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.12 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் சுற்றிக்கொண்டிருந்த குட்டி நாய் ஒன்றை பிளாக்கி என்று பெயர் சூட்டி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதை பாசமாக வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிளாக்கி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டது.
பிளாக்கியை பரிசோதித்த டாக்டர், கடுமையான கேன்சரால் பிளாக்கி பாதிக்கப்பட்டிருப்பதை கூறினார். இருப்பினும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நேற்று முன் தினம் இரவு பிளாக்கி சாலையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பிளாக்கி பரிதாபமாக இறந்தது.
மனிதர்களுக்கு செய்வதைப்போலவே தாரை, தப்பட்டையுடன் ஊர்வலாமக பிளாக்கி உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.
நன்றியுள்ள ஒரு ஜீவனுக்கு மனித நேயத்துடன் இறுதி சடங்கு செய்த அந்த குமார் குடும்பத்தின் செயல் பொதுமக்கள் அனைவரையும் நெகிழவைத்தது.


No comments:
Post a Comment