நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இத்தகைய நடைமுறையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு ஏற்று உறுதி செய்திருந்தது. இத் தெரிவுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின் பின்வரும் பிரிவுகளின் அடிப்படையில் இடம்பெறும்.
1.4 அரசவை
அரசவை என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் அமர்த்தம் செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும்.
1.4.1 அரசவையின் இயைபு
அரசவையானது தெரிவு செய்யப்பட்ட 115 உறுப்பினர்களையும் அமர்த்தம் செய்யப்பட்ட 20 உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும். இவர்கள் அனைவருக்கும் வாக்குரிமையும் மற்றெல்லாச் சிறப்புரிமைகளும் உண்டு.
1.4.3 அரசவை உறுப்பினருக்கான தகுதிகள்
அரசவை உறுப்பினராவதற்குப் பின்வரும் தகுதிகள் தேவைப்படும்:
அ) 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழீழக் குடிமகனாக, குடிமகளாக இருத்தல் வேண்டும். அல்லது ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருத்தல் வேண்டும்.
ஆ) 17 வயது நிறைவடைந்தவராய் இருத்தல் வேண்டும்.
இ) எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது சுயநோக்க செயல்பாடுகளுக்கான குற்றத்திற்காக தண்டிக்கப்படாதவராய் இருத்தல் வேண்டும். அல்லது அவரது வழக்கில் குற்றத் தண்டனை குற்றத் தீர்ப்புகளின் பதிவில் இருந்து அகற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஈ) தமிழீழ மக்களின் நலனுக்குக் கேடான பிற நாடுகளிலிருந்து சேவை, தகுநிலை அல்லது பொருளியல் நன்மை அடையாதவராய் இருத்தல் வேண்டும்.
உ) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு நா.க.த. அரசாங்கத்தின் நோக்கங்களை ஏற்றுக் கொள்கின்றவராய் இருத்தல் வேண்டும்.
மதியுரைக்குழு அறிக்கையின்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவைக்காக தேர்தல்கள் இன்றி அமர்த்தம் செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இடங்களும் பின்வருமாறு அமைகின்றன.
இந்தியா 5
சிங்கப்பூர் 2
மலேசியா 3
மத்திய கிழக்கு 2
மொரிசியஸ் 1
தென் ஆபிரிக்கா 2
ஆபிரிக்காவின் ஏனைய பகுதிகள் 1
ஆசியாவின் ஏனைய பகுதிகள் 1
ஐரோப்பாவின் ஏனைய பகுதிகள் 1
ஓஸியானியா 1
கரிபியன், தென்அமெரிக்கா 1
உறுப்பினர்களை அமர்த்தம் செய்வதற்காகப் பின்வரும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக வருபவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
2. அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்கள் தெரிவில் இடம் பெற விரும்புவர்கள் தாங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவைக்கு உறுப்பினர்களாக அமர்த்தம் செய்யப்படின் தாம் ஆற்றக் கூடிய பணிகள் குறித்து தங்கள் கருத்துக்களை தங்கள் சுயவிபரக் கோவையுடன் அனுப்பி வைத்து தங்கள் விண்ணப்பத்தினை நேரடியாக மேற்கொள்ளலாம்.
3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக எவராவது தெரிவு செய்யப்படல் பயனுள்ளது எனக் கருதும் சமூக ஆர்வலர்கள் தாம் பரிந்துரைக்க விரும்புவரின் எழுத்து மூலமான சம்மதத்துடன் நாம் மேல் குறிப்பிட்ட (2 இல்) விபரங்களை அனுப்பி வைப்பதன் மூலமும் பேராளர்கள் தெரிவுக்கான விண்ணப்பத்தைக் கையளிக்கலாம்.
4. அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு விண்ணப்பம் செய்தவர்களை பிரதமர் உதவிப் பிரதமர்கள் உள்ளடங்கிய குழு மதிப்பீடு செய்யும்.
5. இக் குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் உறுப்பினர்கள் பிரதமரால் அமர்த்தம் செய்யப்பட்டு அரசவையால் உறுதி செய்யப்படுவார்கள்
அமர்த்தம் செய்யப்படும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவதற்கான விண்ணப்பங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
pmo@tgte.org
விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவேண்டிய இறுதித் திகதி: 10. 11. 2011
பிரதமர் அலுவலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
http://www.tgte.org/
26.10.2011


No comments:
Post a Comment