வழக்கு விசாரணைக்காக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் வந்துசென்றபோது அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்காக 30 லட்ச ரூபாய் செலவாகியுள்ளதாக பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கு விசாரணைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருக்கு கடந்த 20, 21 ஆகிய 2 நாட்கள் வந்தார்.
பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பரப்பன அக்ரஹாராவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு அவர் சென்றார். அவர் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருப்பதால் அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பெங்களூர் போலீசார் 1000 பேரும், தமிழகத்தில் இருந்து வந்த 400 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்காக வந்த போலீசாருக்கு சாப்பாடு, சிறப்பு சம்பளம், போக்குவரத்து என கர்நாடக போலீசாருக்கு மட்டும் ரூ. 30 லட்சம் செலவானது என ஜோதி பிரகாஷ் மிர்ஜி தெரிவித்தார்.


No comments:
Post a Comment