லிபியாவில் இடம்பெற்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ஊழல் அரசியல்வாதிகளுக்கும், வாகனத் தொடரணிகளுக்கும் மக்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
பாதாள உலகக் குழுவினரின் நடவடிக்கைகளைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை.
அநீதிக்கு எதிரான போராட்டத்தின் போது கட்சி பேதங்களைக் களைந்து அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளுக்காக சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment