பிரதமர் மன்மோகன் சிங் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது, நாட்டில் இடம்பெறும்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை மேற்பார்வை செய்வதற்கு, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் அதிகாரத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பிரதமர் அலுவலக செயலாளர் அஜித் செத் இது தொடர்பில் தெரிவிக்கையில், பிரதமர் அடுத்த நவம்பர் மாதம் 2-5 பிரான்ஸுக்கும், நவம்பர் 9-12 மாலை தீவுக்கும், நொவம்பர் 18-20 இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதனால் பிரதமர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில் நாட்டை நிர்வகிக்க அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்களான ப.சிதம்பரம் அல்லது பிரணாப் முகர்ஜி டெல்லிக்கு வரவழைக்கப்படுவர் எனவும், அவசரமானதும், அவசியமானதுமான தீர்மானங்கள் மாத்திரம், பிரதமரின் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
ப.சிதம்பரம் - பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு இடையில் 2ஜி ஸ்பெக்ரம் முறைகேடு தொடர்பிலான முறுகல் நிலையொன்று அண்மையில் ஏற்பட்ட நிலையில், பிரதமர் அலுவலகம் இத்தீர்மானம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment