பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது இல்லை மக்களுக்கு பொருத்தமற்ற நிகழ்ச்சிகளை ஏதாவது ஒரு தொலைக்காட்சி அல்லது வானொலி ஒலிபரப்பினால் அதன் லைசன்ஸை ரத்துச் செய்யும் முடிவை எடுப்பதும் இந்த ஓஃப் கொம் நிறுவனமே. சனல் 4 தொலைக்காட்சியானது இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியிருந்தது யாவரும் அறிந்ததே. இதனைப் பார்த்ததால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் சில சிங்களவர்கள் ஓஃப் கொம் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்தனர். இது நன்கு திட்டமிடப்பட்டு இலங்கை தூதரகத்தினூடாக செயல்படுத்தப்பட்டது.
சில சிங்களவர்கள் தாம் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் சிலர் தாம் இந் நிகழ்சியைப் பார்த்து அச்சமடைந்ததாகவும், மேலும் சிலர் இது ஒளிபரப்ப முடியாத அளவு கொடூரமான காட்சிகளைக் கொண்டதாகவும் ஓஃப் கொம் நிறுவனத்திடம் முறையிட்டுள்ளனர்.
பெருந்தொகையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதால் ஓஃப் கொம் நிறுவனம் இதனை ஆராய முற்பட்டது. அத்தோடு சனல் 4 தொலைக்காட்சியிடன் இது குறித்து விளக்கத்தையும் கோரியது. இதற்கான விளக்கத்தை சனல் 4 தொலைக்காட்சியின் இயக்குனர்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கடந்த சில மாதங்களாக ஓஃப் கொம் நிறுவனம் பரிசீலித்து வந்தது.
இதேவேளை இந்த முறைப்பாடுகளால் சனல் 4 தொலைக்காட்சிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் இல்லையேல் அதன் லைசன்ஸ் ரத்தாகலாம் என்ற எண்ணம் இலங்கைத் தூதருக்கு எழுந்ததாம். அதனை அவர் இலங்கைக்கும் அறிவித்துள்ளார்.
இதனால் இலங்கை அரசானது கடந்த சில மாதங்களாக நிம்மதியாக இருந்தது. ஆனால் நேற்றைய தின அதுவும் கலைந்துபோனது. ஓஃப் கொம் நிறுவனமானது சிங்களவர்கள் தெரிவித்திருந்த அவ்வளவு முறைப்பாடுகளையும் ரத்துச்செய்ததோடு சனல் 4 தொலைக்காட்சி தமது கட்டுப்பாடுகளுக்கு இணங்கவே நிகழ்ச்சியை ஒளிபரப்பியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இதனால் சனல் 4 க்கு மேல் செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளையும் அது ரத்துச் செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இச் செய்தியானது இலங்கை அரசுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளதாம். ஏன் எனில் அவர்கள் இம் முறைப்பாடுகள் நிச்சயம் வேலைசெய்யும் என நம்பியிருந்தார்களாம். போதாக்குறைக்கு இலங்கைத் தூதுவரும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் இறுதியில் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளது.


No comments:
Post a Comment