கார் விற்பனையில் டொயோட்டாவை பின்னுக்குத் தள்ளி வோக்வேகன் இந்த ஆண்டில் (2011) முதலிடத்தை பிடிக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது.
ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் கார் விற்பனையில் 2010ல் உலக அளவில் 3வது இடத்தை பிடித்தது. ஆனால், இந்த ஆண்டு வோக்ஸ்வேகன் கார் விற்பனை 13 சதவீதம் உயர்ந்து 81 லட்சமாகவும், ஜெனரல் மோட்டார் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து 75.5 லட்சமாகவும், டோயோட்டா விற்பனை 9 சதவீதம் சரிந்து 72.7 லட்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வோக்ஸ்வேகன் விற்பனை சீனாவில் 20 சதவீதமாகவும், இந்தியாவில் 2 மடங்கும் அதிகரிக்கும் என்று ஜே.டி. பவர் அண்ட் அசோசியேட்ஸ் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment