
எம்.எஸ்.வி தொடங்கி இளையராஜா வரை சினிமாவில் ஒரு பாடல் காட்சியிலாவது தோன்றி
விடுவார்கள் நமது மூத்த இசையமைப்பாளர்கள். இளைய தலைமுறை இசையமைப்பாளர்களோ தங்களது ஆல்பங்களை மியூசிக் விடியோவாக உருவாகும்போது ஒரு ஹீரோவுக்கு உரிய எல்லா தோரணைகளோடும் பாடலில் தோன்றி நடிப்பததை வழக்கமாக வைத்திருக்க்கிறார்கள்.
தற்போது இந்த வரிசையில் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் ஒரு பாடலில் தோன்ற வந்து விட்டார். தற்போது அவர் இசை அமைத்து வரும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் இடம்பெரும் ” ஒரு முறை “ என்று தொடங்கும் பாடலில் தோன்றி நடிக்க, படக்குழுவினருடன் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்கு அக்டோபர் 28 ஆம் தேதி விமானத்தில் பறக்கிறார். இந்த அதிகார பூர்வ தகவலை படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார். இந்தப் படகுழுவில் நாயகன் அதர்வா, நாயகி அமலா பால், பத்து நடணக் கலைணர்கள், இந்தப் பாடலுக்கு நடனம் அமைக்க இருக்கும் பிருந்தா ஆகியோருடன் படக்குழு கிளம்பத் தயாராகி விட்டது. இந்தப் பாடலை லாஸ் வேகாஸ் கிராண்ட் கேன்யன், நியூ யார்க் ஆகிய இடங்களில் படம் பிடிக்கிறார் குமார்.
இந்தப் பாடலில் தோன்றி தனது குரலுக்கு தானே வாயசைப்பதோடு சில மென்மையான நடன அசைவுகளையும் ஜி.வி.பிரகாஷ் செய்ய இருக்கிறார். இந்த பாட்டில் தோன்றும் ஜி.வி. பிரகாஷ் , தனது நண்பர்கள் கேட்டும் ஹீரோவாக நடிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment