புற்றுநோயால் இறந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், புற்றுநோய்க்கு ஆரம்ப கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்பிள் நிறுவன நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 5ம் திகதி இறந்தார். இந்நிலையில் ஸ்டீவ் வாழ்க்கை குறிப்பு பற்றி 630 பக்க புத்தகம் ஒன்றை வால்டர் இசாக்சன் என்பவர் வெளியிட்டார்.
அதில் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி, சகோதரி, நண்பர்கள், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் கடைசி 2 ஆண்டுகளுக்கு மேலாக அவரிடம் நடத்திய நேர்காணல்கள் மூலம் கிடைத்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் வெளி உலகிற்கு தெரியாத ஸ்டீவ் பற்றிய அந்தரங்க வாழ்க்கை, திருமண பந்தம், சகோதரி, தொழிலதிபர்கள், நண்பர்களுடனான உறவுகள், ஆப்பிள் ஸ்மார்ட்போன் மற்றும் கணணியின் புதிய கண்டுபிடிப்புகளும் அடங்கும்.
ஸ்டீவுக்கு புற்றுநோய் தாக்கியது முதல் முறையாக 2003ம் ஆண்டு தெரிந்தது. ஆரம்ப கட்ட நிலையிலேயே அறுவை சிகிச்சை மூலம் நோயை குணப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் மறுத்தார்.
பதிலாக பழரசங்கள், மூலிகை மருந்துகள், அக்குபஞ்சர் முறையே போதும் என்று கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்ய மனைவி லயூரெனெ பவல், சகோதரி மோனோ சிம்சன், குடும்பத்தினர், நண்பர்கள் வலியுறுத்தியும் அதை நிராகரித்தார்.
நோயின் அறிகுறி அதிகம் தென்பட்ட பின்னரே அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு ஒத்துழைத்தார். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தந்திருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று நம்முடன் இருந்திருப்பார் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


No comments:
Post a Comment