மேலும் தான் போரில் இறந்தாலும் நேட்டோவுக்கும், மற்றைய எதிரிகளுக்கும் எதிரான போராட்டத்தை தனது குடும்பத்தினர் முன்னெடுப்பர் என்று தெரிவித்த அவர் லிபிய மக்கள் அன்னியரை விரட்டும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் கடாபி தனது இறுதிக்கிரியைகள் இஸ்லாமிய முறைப்படியே நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் என்று அத்தகவர்கள் கூறுகின்றன.
அதற்கு அமைவாக அவருடைய மகன் செய்ப் அல் இஸ்லாம் இன்று அல் அராபியாவுக்கு அனுப்பிய ஒலி நாடாவில் போராட்டம் தொடருமென தெளிவாக அறிவித்துள்ளார். பாதாள சாத்தான்களான நேட்டோ உட்பட அனைத்து எதிரிகளும் மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டுமென கேட்டுள்ளார். இது எமது மண் உயிருள்ளவரை போராடி மடிவோம் என்றார்.
அதேவேளை தற்போது ஆட்சிக்கு வந்துள்ள லிபிய போராளிகள் அரசு நேற்று விடுத்த அறிவிப்பு மேலை நாடுகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. லிபிய மேல்மட்ட அரசு இஸ்லாமிய ஸாரியார் சட்டங்களுக்கு அமைவாகவே தமது நாட்டின் நிர்வாகம் அமையும் என்று கூறியுள்ளது.
சிறிய குற்றத்திற்கு பாரிய தண்டனை விதிக்கும் மிகவும் கடுமையான ஸாரியார் விதிகள் பெண்ணடிமைத்தனத்திற்கும் காரணமானவை என்று மேலை நாடுகள் கருதுகின்றன. இந்தச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது ஆட்சி நடைபெறுமென லிபியா புதிய அரசு அறிவித்தது தமக்கு பாரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக டென்மார்க் ஆளும் கட்சியின் வெளிநாட்டு பேச்சாளர் ஜெப்ப கொபூட் தெரிவித்தார்.
இதற்காகவா லிபியாவில் குண்டு வீசினோம் என்பது அவரது கவலையில் தொனித்தது. லிபியப் போர் கடைசியில் பேயை விரட்டி பிசாசை ஆட்சிக்குக் கொண்டுவந்த கதையாக முடிந்திருக்கிறது.


No comments:
Post a Comment