இலங்கைக்கு வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக
எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டினை, பிரித்தானிய அரசு மறுத்துள்ளது.கடந்த 10 வருடங்களாக இலங்கைக்கு பாரியளவில் பிரித்தானியா மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாகவும், இவை இலங்கை அரசாங்கத்தினால் வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்படுவதாகவும் பிரித்தானிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தினர்.
எனினும் இதை திட்டவட்டமாக மறுத்துள்ள பிரித்தானிய அரசு, மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் நேரடியாக இலங்கை அரசாங்கதிற்கு கையளிக்கப்படுவதில்லை. ஐ.நா சபை, செஞ்சிலுவை சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாகவே இந்த உதவிகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் பக்க சார்பற்ற வகையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தி வருவதுடன் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கும் ஆதரவளித்து வரும் நிலையில் எதிர்க்காட்சிக்கள் இக்குற்றசாட்டினனை சுமத்தியிருந்தன.
அண்மையில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் லியம் ஃபாக்ஸ், பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதால், பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் வெட்டரியுடன் சந்தேகத்துக்குரிய வகையில் தொழில்முறை தொடர்பு கொண்டிருந்தார் என எதிர்க்கட்சிகளினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். இலங்கைக்கும் வெட்டரியுடன் அதிக தடவை விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும், பிரித்தானியாவிடமிருந்து ஆயுதங்களை இவர்கள் மூலமாக இலங்கை அரசு பெற்றிருக்கலாம் எனவும் அல் ஜசீரா ஊடகம் சந்தேகம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment