
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா '' இன்று தமிழராகிய நாம் தலைநிமிர்ந்து நிக்கிறோமா??? ஆரசியல் தான் எமக்கு பின்னடைவை தந்தாலும் எம் கலாச்சாரம் எங்கே ?
தமிழினத்தின் கலாச்சார பூமியாக இதுவரை விளங்கிவந்த யாழ்ப்பாண மண் இன்று தன்னிலை தவறி கலாச்சார சீரழிவு தலைவிரித்தாடும் நரக பூமியாகிவிட்டதனையே கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் தோழர் தோழிகளே நீங்கள் தான் நாளைய சமுதாயத்தின் உயிர் நாடிகள் என்பதை அறிந்து செயற்படுங்கள்.
கள்ளக் காதலால் கருகிய உயிர், பிறந்த சிசுவை குழி தோண்டிப் புதைத்த சோகம், கள்ளக் காதல்களால் பாழ்படும் யாழ்ப்பாணம் என்று பத்திரிக்கைகளும் இணையங்களும் தலையங்கங்கள் தீட்டுகின்றார்களே தவிர இவை ஏன் வந்தன என்றோ அன்றி இதன் தீர்வு என்ன என்றோ சிந்திப்பதாக தெரியவில்லை.
தமிழருடைய கலாச்சாரத்திற்கு இணை எதுவும் இல்லை என்பது யாவரும் அறிந்த விடயம் ஆனால் இன்றைய சூழ்நிலை அவற்றை எல்லாம் புரட்டிபோட்டு இருக்கிறது.கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய நிலை எல்லாம் எமக்கு என்ன சொல்லுகின்றன?
பெண்கள் இன்றைய நிலை மோசமாகத்தான் உள்ளது காரணம் ஆண்வர்க்கத்தின் தாக்கத்திற்கு உள்ளகிரார்கள்.பெண்கள் பேருந்துகளிலோ கோவிலிலோ அல்லது அலுவலகங்களிலோ தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள் இதற்கு யார் காரணம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும் ஆண்கள் அப்படி நடந்து கொள்ளுமளவுக்கு பெண்கள் இருக்கக்கூடாது என்பதும் எனது அவா .....
இதை எல்லாம் தவிர்க்க கட்டாயம் எல்லோருக்கும் விழிப்புணர்வு அவசியம்.நாம் இன்று ரசித்த விடயம் பேருந்தில் பல ஆண்கள் ஒரு பெண்ணை உத்து நோக்கினார்கள் அது அவளின் அழகோ அல்லது அவள் உடுத்திருந்த அரைகுறை ஆடையோ !!!!
""வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது""
நாம் வேண்டுவது எமது கலாச்சாரம் சீரழியக்கூடாது என்பது மட்டும் தான்
"உடம்பை காட்டி உடுப்பு போடுபவள் எவளும் கெட்டவள் அல்ல
உடம்பை மறைத்து உடுப்பு போடுபவள் எவளும் நல்லவள் அல்ல "



சுகாதாரத்துறை திருமணமாகாத கருக்கலைப்புகளும் சட்டவிரோத கருக்கலைப்புகளும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள இந்தத்தருணத்தில் இத்தகைய கொடூரமான தலைப்புகளுடன் வெளியாகும் செய்திகள் எமது சமூகத்துக்கு ஏதோவொன்று பற்றாக்குறையாக இருப்பதை உணர்த்துகின்றது. அதுயாதென்று ஆராயமுனைந்தால் "விழிப்புணர்வு ஏற்படுத்தல்" பற்றிய சமூக அமைப்புகளின் அக்கறையின்மையே என்று புலனாகும்!
கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இன்று முகப்புத்தகத்திலும் ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர்.இதில் வேடிக்கை என்ன வென்றால் விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள் இப்போது ஆபாச வலைதளங்களையும் ரசிக்கிறார்கள் .காரணம் என்ன சிந்தியுங்கள் !
மேலும் எம் தேசத்தில் ஆங்காங்கே தோன்றியுள்ள விடுதிகளும் இதற்கு வலியமைக்கின்றன அன்றைய காலத்தில் வீதிகளில் பெண்ணோ ஆணோ சகயமாக நின்று கதைப்பதே காணமுடியாது ஆனால் இன்று அந்நிலை மாறி மிதிவண்டியில் இருந்தும் பூங்காக்களில் இருந்தும் எமது இளம் சமுதாயம் செய்யும் செட்டைகளோ அதிகம் இதைவிட என்னகொடுமை என்றால் சினிமாவில் நடிகை நடிகர் அவர்கள் அணியும் பாணியில் உடை அணிவது இதற்கு ஒரு சிறிய கதை மூலம் உணர்த்தலாம்
திருவிழாவில துலைஞ்சு திரும்ப கிடைச்ச மகனிடம் அப்பா கேட்டாராம், "உனக்கு சொன்னான் தானே சனகுட்டத்துக்குள்ள அம்மான்ட பாவாடைய பிடிச்சுக்கொண்டு போ எண்டு" அதுக்கு மகன் சொன்னான் , "நானும் அம்மான்ட பாவாடைய பிடிக்க எட்டி... எட்டி.. பார்த்தன், ஆனா எட்டவே இல்ல அப்பா" என்டானாம். இப்போது தெரிகிறதா எமது கலாச்சாரம் எவ்வளவு தூரம் தேய்ந்துகொண்டு போய்விட்டது .
சிவாஜி திரைப்படத்தில் விவேக் கூறிய ஒரு வார்த்தை நினைவுக்கு வருகுது "நல்ல
பொண்ணு வேணுமெண்டா யாழ்ப்பாணம் தான் போகவேணும்" எண்டு இப்போது இது எம் நடை முறைக்கு பொருத்தமான விடயமோ கொஞ்சம் சிந்தித்து பாருங்க முன்னைய காலங்களில் எம் கலாச்சாரத்தின் மேன்மை பத்தி கூறிய வாய்கள் இன்று யாழ்ப்பாணம் சீரழியுது பாலாப்போகுது என்றெல்லாம் தீட்டி தீர்க்கிறார்கள். பிரவுசிங் சென்டர்களை எடுத்துகொண்டோமானால் எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய தமிழ் கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும். மேலும் இள வயது இளைஞர்கள் கைகளில் நத்தனம் ஆடும் செல்போன்கள் மெமரி கார்டு, பென்டிரைவ் எல்லாம் உங்கள் உயர்ச்சிக்கு காரணமாக இருந்தால் பரவாயில்லை அவை உங்கள் விழ்ச்சிக்கு அல்லவா காரணமாக அமைகின்றது.
பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது. இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் பெற்றோர்கள் அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், டிவி போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.
பிரவுசிங் சென்டர்களை நடாத்தும் அன்பான தோழர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் 18 வயது நிரம்பிய இளையோர்களை அனுமதியுங்கள் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் . மேலும் ஆபாசதளங்கள் பார்ப்பதை தடைசெய்யும் மென் பொருட்களை பாவியுங்கள் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இது பற்றி அவ்வவ் மாவட்ட போலீஸ் ஆதிகாரிகள் முன்வர சமூக ஆர்வலர்கள் முன்வரவேண்டும் .
பெற்றோர் கொடுக்கும் அதீத சுதந்திரம் பிள்ளைகள் எப்போதும் பெற்றோரின் கண்காணிப்புக்குள் இருக்கும் வரை தவறுகள் நடப்பதில்லை . மேலும் வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர்கள் முயற்சிக்க வேண்டும் மேலும் பிள்ளைகள் கையில் பிலங்கும் அதீத பணம் இவற்றை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் மேலும் பாடசாலை நிர்வாகமும் இதற்கு உரிய முறையில் கவனம் எடுக்க வேண்டும்.எம் தோழர்களை சீரழிக்கும் மது, போதைவஸ்து பொருட்கள் குடாநாட்டில் பரவலாக கிடைக்கின்றன அவற்றில் உறைந்து விட்டார்கள். ரவுடிசம் எல்லாம் அதிகரித்துவிட்டன .இதை கேக்க யாரும் இல்லை என்ற வைராக்கியத்தில் இருக்கின்றார்கள். பெண்கள் சற்று சிந்தித்து செயற்படுங்கள் காரணம் முகபுத்தகம் அவை உங்களுக்கே தோண்டப்படும் புதைகுழி என்பதையும் அறிந்து செயற்படுங்கள்.
இனிவரும் இளையோருக்கு எம் சமுதாயத்தை சந்தோசமாக ஒப்படைக்கவேனும் தவிர சந்தேகத்துடன் அல்ல .,.படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும்.
பூனைக்கு யார் மணிகட்டுவதென்று சிந்தித்து இருக்காது; உரியமுறையில் அரசியல்த்துறையைச் சார்ந்தோரும் சமூக அமைப்புகளை வழிநடத்துவோரும் இதுபற்றி சிந்தித்து செயலாற்ற முன்வர வேண்டும்.
சிந்திப்போம் செயட்பாட்டல் ஒன்றிணைவோம்''


No comments:
Post a Comment