இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 10மணியளவில் புதுமுறிப்பு பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றினுள் கைத்துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆறுபேர் கொண்ட கொள்ளையர் கும்பல் வீட்டிலிருந்தவர்களை கடுமையாக தாக்கியதுடன், வீட்டிலிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து வீட்டிலுள்ள பொருட்களை கொள்ளையிட முயன்றபோது, வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார்.
இதனை அவதானித்த அருகிலிருந்த படைமுகாம் படையினர் அங்கு விரைந்து வர கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டள்ளனர். இதனயைடுத்து படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி தப்பிச் செல்ல முயற்சிக்கவேண்டாம் என கேட்டள்ளனர்.
எனினும் அதனை அசட்டை செய்யாத கொள்ளையர்கள் பெறுமதியான பொருட்கள், நகை மற்றும் பணம் அகியவற்றை கொள்ளையிட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் கனகபுரம் வீதியால் பயணித்த அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டு படையினரால் சோதனையிடப்பட்டனர்.
இதேவேளை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருந்பதை காணமுடிகின்றது.


No comments:
Post a Comment